நானும் அவளும் ஒருநாள்

.."" நானும் அவளும் ஒருநாள் ""...
அந்த கள்ளிச்செடியெல்லாம்
சிறு காக்கா முள்ளெடுத்து
கண்மணியே உன் பெயரை
நான் எழுதிவச்சே,,,
காதலியே நல்லவளே
கட்டழகு கொண்டவளே
கண்களுக்கு மைதீட்டி
கவிதைகள் தந்தவளே,,,
நெற்றிக் கூந்தலாட்டி
நெஞ்சத்தை தின்றவளே
புருவத்தை வளைத்தே
விழியம்பு தொடுத்தவளே,,,
சுவாசமாய் உள்ளிழுத்து
நேசமாய் தொட்டவளே
மெல்லிய புன்னகையில்
மெளனமாய் கொன்றவளே,,,
ஒத்தையடி பாதையிலே
ஒத்தையா நீ போகயிலே
ஒருத்தருக்கு தெரியாம
ஓபின்னே நானும் வந்தேன்,,,
நேசமாக ஒரு பார்வை
நேர்த்தியாய் பார்த்துவிட்டு
பார்க்காமல் போவதுபோல்
பாசாங்கு செஞ்சவளே,,,
மாமர தோப்புக்குள்ளே
மாரணைத்த மடித்துணியில்
மஞ்சதேச்சு குளிக்கையிலே
பாவிமனச தீயா சுட்டவளே,,,
அந்த பாறாங் கல்மேலே
உன் பாதத்த தூக்கிவச்சு
அரைச்சு வச்ச சந்தனத்த
அழகாய் நீ தேக்கயிலே,,,
பட்சியெல்லாம் படபடக்க
பாவி மனமும் துடிதுடிக்க
தென்றலெனை தழுவுவதாய்
நெஞ்சுக்குள்ள இனிக்குதடி,,,
என் ஆசையது தாங்காமல்
அடிமனசும் தான் குதிக்க
ஆயிரம் கனவுகள் வந்தே
ஆனந்தத்தை தந்ததடி,,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..