கண்ணா வருவாயா
கண்ணா வருவாயா....!!
கால் தடத்தை வரைந்து வைத்துக் காத்திருக்கிறேன்.....!! - உன்
பால் முகத்தைப் பார்ப்பதற்கே தவமிருக்கிறேன்....!!
வான் இருக்கும் நிலவினிலே கறைகளுண்டு....!
தேன் இருக்கும் மலரினிலே முட்களுண்டு....!
நான் இருக்கும் நிலையினிலே பல குறைகளுண்டு....!
வான் நிறத்து மேனியனே.....!,
வந்துவிடு.....இதைப் புரிந்து கொண்டு.....!!
கால் தடத்தை வரைந்து வைத்துக் காத்திருக்கிறேன்.....!! - உன்
பால் முகத்தைப் பார்ப்பதற்கே தவமிருக்கிறேன்....!!