வாத்தி

வாத்தி....!
என் முன்னால் எதிரியே....!! நலந்தானே...!

துள்ளி விளையாடத் துடித்திருக்கும் வயதினிலே
பள்ளி வகுப்பினிலே சிறைவைத்தாய்.... நீ என்னை...!!

பாசம் கொடுத்தென்ன அன்னை வளர்க்கையிலே
பாடம் சொல்வதாய் மிரட்டிவைத்தாய்...நீ என்னை....!!

சிந்தையெல்லாம் பெண்களின் சிநேகத்தைச் சிந்திக்க
மந்தையென எங்களை தொழுவத்தில் அடைத்துவைத்தாய்....!!

வகைபிரித்து, வகைபிரித்து நீ செய்த கொடுமைக்கோர்
தொகை கொடுத்து, வாத்தியென்று வழிமொழிந்த தெந்நியாயம்...!!

வாத்தி....!
என் முன்னால் எதிரியே....!! நலந்தானே...!

அன்று,
ஆத்திரத்தை அடக்கிவைத்தே, ஆறறிவும் முடங்கியது......!
இன்று, வாழ்வின்
சூத்திரத்தை அறிந்தபின்னே, சொன்ன பாடம் புரிகிறது....!!

கொட்டிக் கொடுத்த அறிவுச் செல்வத்தை
எட்டி உதைத்தது, என் தவறென்பது
வெட்டிப் பயலென்ற பட்டம் பெற்றபின்
பொட்டில் அறைந்தாற்ப்போல், புரிந்துவிட்டது...!!

சோதிடமென்று சொன்னதை கணிதச் சூத்திரம் என்று உணரவைத்தாய்...!!
மரபினை அறியும் மார்க்கமதே, வரலாறென்றெனை உணரவைத்தாய்...!!
இயற்கையை அறியும் வழிமுறையே, அறிவியலென்றும் உணரவைத்தாய்...!!
இத்தனை சொன்ன நீ, ஏனோ உன் அருமை சொல்ல மறந்துவிட்டாய்...!!

பிட்சை எடுக்கும் நிலைவந்தபின் தான்
“கற்கை நன்றே” – யோசிக்கிறேம்.....!!

தொலைத்த நாட்கள் திரும்பவராதே.....வாத்தி....!!

கடவுள் போல வாத்தி என்பதை
காலம் உணர்த்தியது....!!
கடந்து போன நாட்கள் எந்தன்
நினைவை உறுத்தியது.....!!

வாழ்க......நீ......வாத்தி....!!

எழுதியவர் : iravi (7-Sep-15, 4:01 pm)
பார்வை : 122

மேலே