உயர்ந்த உணர்வுகளே

நாமிறைவ னைத்தொழும் போது,
சங்கீதம் கேட்கும் போது,
இங்கிதமாய் ரசிக்கும் போதும்;
எல்லையில்லா ஆனந்தம் கொள்வோம்! 1

கனவுகள் காண்கின்ற போதும்,
காதலன் முத்தமிடும் போதும்;
காதலி கண்களை மெதுவாக
மூடிக்கொள் வதியல்பும் சுகமுமே! 2

வாழ்வின் உன்னதச் செயல்கள்,
தருணங்கள் கண்களில் தோன்றும்
காட்சிகள் மட்டுமல்ல! உள்ளத்தால்
உணரப்படும் உயர்ந்த உணர்வுகளே! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-15, 3:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே