வரமா சாபமா

என்னிடத்தில் வெறுத்து நின்றனர்
என் காதலை கண்டு..!
எனக்கு வலித்தபோது துடித்து நின்றனர்
என் கண்ணீரைக் கண்டு!!
~~~~~~~~
என் பெற்றோர் துடித்தபோதும்
எனக்கு வலிக்கவில்லை
காரணம்,
நான் வடித்துக்கொண்டிருக்கும் கண்ணீர்
என் காதலுக்காக!!
~~~~~~~~
இருந்தாலும்...
என் பெற்றோரின் கண்ணீர் மாத்திரம் ஏனோ????
அன்றும் எனக்காக!
இன்றும் எனக்காக!!
~~~~~~~~
கண்ணில்லா காதல் என்றால்..
கண்ணீர் மட்டும் எதற்காக???
என்னவனின் கால் தடங்களை
காணாமல் செய்வதற்கா?????
~~~~~~~~
நிச்சயம் இல்லை..
அவன் நினைவுகளை நித்தமும்
நீரூற்றி வளர்ப்பதற்கே....!
~~~~~~~~
என் பெற்றோரின் அன்பில்
ஓர் கொடியாய் படர்கின்றேன்..!
உன் அன்பெனும் பருவமழை
நிச்சயம் மீண்டும் எனை சேரும்
என்ற நம்பிக்கையில்....!!
~~~~~~~~
"வா" என சொல்ல
நீ சொன்ன வார்த்தை எனை தடுக்கிறது....
இருந்தும் மனமோ உன் வரவுக்காய்
தவமிருக்கின்றது!!!!"
~~~~~~~~

எழுதியவர் : Ran Joo (8-Sep-15, 9:12 am)
சேர்த்தது : ரன் ஜோ
பார்வை : 83

மேலே