கச்சாள பந்து

மீந்துபோன கச்சாளய
நேக்கா திருடி
மாமா கிட்ட கெஞ்சி
வாங்குன தார்குச்சியோட
கோலிகுண்டு சைசு
கல்ல வச்சு
பல்ல கடிச்சி
இருக்கி சுத்தி
ஆட்டுக்கு வைக்குற
கஞ்சி தண்ணீய
ஆயாவுக்கு தெரியாமா திருடி
அதுல பந்த ஊரவைச்சு
தயார் பன்ன பந்துல
ஊரகூட்டி விளையாண்ட
சூர பந்துல விழுவுர
அடி வாரம் முழுக்க
தொட்டு தொட்டு
தேயிச்சது ஒரு காலம்

எழுதியவர் : sathiyadas (8-Sep-15, 1:26 pm)
பார்வை : 56

மேலே