எங்க கூட்டம்
இது ஓனான் பிடிச்ச
கூட்டமுங்க
கொஞ்சம் தும்ப
பூவிலும் தேன்
குடிக்கும் கூட்டமுங்க
பொன்வண்டு பிடிச்ச
கூட்டமுங்க
அதுல ரேசு வச்சு
ஜெவிச்ச கூட்டமுங்க
கச்சாள பந்து சுத்தி
முதுகு பழுக்க அடிவாங்குன
கூட்டமுங்க
ஐஞ்சு பைசா பத்து பைசா
மேல திருடாத கூட்டமுங்க...
சட்ட கிளிய சண்ட போடுவோம்
ஆனா சக்திமான ஒன்னா பார்க்கும் கூட்டமுங்க...
கில்லி தாண்டி கஞ்சி
காய்ச்சும் கூட்டமுங்க
பம்பரத்த ஒடைச்சு
ஆஸ்கரு வாங்குன கூட்டமுங்க
குண்டு பசங்கள பார்த்ததில்ல
எங்க தலை எண்ணெய் முகவரி கேட்டதில்ல
கூட்டாஞ்சோறு தின்னு பசிமறக்கும்
கூட்டமுங்க..
கட்டடிக்க மட்டும் தான்
காய்ச்சலு வரும் கூட்டமுங்க.
எங்க அம்மா சொன்ன பாடத்த
எந்த வாத்தியாரும் சொன்னதில்ல..
தட்டான் புடுச்ச கூட்டம் தான் இன்னைக்கு மவுசு பிடிச்சி சுத்துறாங்க..
எண்ணெய் பார்க்காத தலையெல்லாம் இன்னைக்கு
ஜெல்லு போட்டு சுத்துதுங்க
கூலு குடிச்ச வாய்லெல்லாம்
இன்னைக்கு பீசா தின்னு
பீத்திகுக்குதே
நாம விளையாண்ட மண்னெல்லாம்
இன்னைக்கி அடிமாட தான்
போகுதுங்க
வெள்ளைகாரன துரத்துன கூட்டமெல்லாம் இன்னைக்கி
அடிமையா தான் கிடக்குதுங்க...