ஓரக்கண்ணால் ஒரு முறை பார்த்துவிடு
பின்னணி இசையே
தேவையில்லாத
மௌனக் கவிதை நீ,,,
அழகிய அர்த்தங்களே
அசந்துபோகும்
அகராதி நீ ....
எங்கோ இருந்து கொண்டு
நினைவுத் தூண்டிலில்
தினம் தினம் என்னை
சுண்டியிழுத்து வேடிக்கை காட்டுகிறாய்.
நான் படும் வேதனைகள்
உனக்கு மகிழ்ச்சியைத் தருமென்றால்
தினம் தினம் அல்ல
ஒவ்வொரு நொடியும்
அனுபவிக்கத் தயார்...
ஓரக்கண்ணால்
ஒரு முறை பார்த்துவிடு.
சுட்டெரிக்கும் வேதனைகள்கூட
சுகம் தரும் மார்கழிக் குளிராய்
மாறிவிடும் எனக்கு...