நீ பிறந்ததினம்

நீ பிறந்ததினத்துக்கு மீண்டும் போகவேண்டும்
உன்னுடன் வாழாத
இந்த 24 வருடங்களை
வாழ்ந்துபார்த்திட வேண்டுமடி
..........
என் கைகடிகாரம் நீ பிறந்த
நேரத்திலே தினமும் நிற்குது
நான் இதே நேரத்திலே
இரு(ற)ந்துவிடுகிறேன்
என்று தினம் தினம்
அடம்பிடிக்குது
நான் தான்
தலையில் இரண்டு
தட்டு தட்டி அவனை ஓடசெய்கிறேன்.....
........
நாட்காடிகள் எல்லாம் உன்
பிறந்ததினத்தை கிழிக்ககூடாது
என்று உண்ணாவிரதம் இருக்குதடி..
.........
கண்களால்
சிரிக்கவும்
முறைக்கவும்
அறிந்தவள்
நீயடி

எழுதியவர் : (8-Sep-15, 1:33 pm)
Tanglish : nee piranthathinam
பார்வை : 73

மேலே