பட்டாம்பூச்சி சிரிப்பு பிண்டங்கள் -சந்தோஷ்

புதியதாய் பிறந்தக் குழந்தைகள்
பட்டாம்பூச்சி சிரிப்புகளைப் பறக்கவிட்டிருந்தது
அனாதை இல்லக் காப்பகத்தில்...!

சில நாட்களுக்கு முன்னர்
அந்த பட்டாம்பூச்சி சிரிப்புக் குழந்தைகளை
மாநகராட்சி குப்பைத் தொட்டியில்
தெருநாய்கள் தாலாட்டிக்கொண்டிருந்தன.

காக்கைகளும் ஈக்களும்
முத்தமிட்டு கொஞ்சிக்கொண்டிருந்தன.


யாரோ சில
மணமாகாத தாய்மார்கள்
சிறகடிக்கும் இந்த பச்சிளம்
பட்டாம்பூச்சிகளின் சிரிப்புகளை
ரசிக்க மனமில்லாமதானோ..

தன் யோனியில் துப்பிய
தேவையற்ற பிணடக்
கழிவென கொட்டினார்களோ
குப்பைத்தொட்டியில்
இந்தக் குழந்தைகளை..?

---
**
இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (9-Sep-15, 3:18 pm)
பார்வை : 84

மேலே