மரணம் எனும் தூது வந்தது😱💀

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்தவன்..
இன்று காதல்பரிசாய்
கேட்கின்றான் என்னுயிரை..
💤💤💤💤💤😢
துச்சமென நினைத்தாய் என்னுயிரை
மிச்சமின்றி வதைத்தாய்
அணுஅணுவாய்
💤💤💤💤💤😢
கத்தி கொண்டு என் காதல்
எனை துரத்த - இனி
கத்தியும் பயனில்லை என
இதயம் தடுக்க..
💤💤💤💤💤😢
எனை பொத்தி பொத்தி வளர்த்த
என் அன்னை தந்தையையும்
எனக்காய் துடிக்கும்
உடன்பிறப்பும்
💤💤💤💤💤😢
இறுதிநிமிடங்களில் துளிர்விடுகின்றது..
காதலுக்காய்
நான் மறந்த மறுத்த பாசங்கள்...
💤💤💤💤💤😢
விழிகள் பெருங்குளமாகி
விட்ட தவறில்
இதயம் வெதும்பி
வெறுமையாய் நிற்கிறேன்..
💤💤💤💤💤😢
காதல் பசிக்கு
கடைசி பலியாக
என் உயிர் இருக்கட்டும்..
💤💤💤💤💤😢