தோழியாய் காதலியாய்
பெண்ணவள் என்பவள் என்னுள் இருப்பவள் !
தாயென தெரிந்தாள் என் தெய்வமானாள்!
தங்கையென பிறந்தாள் என் தனிமையை தவிர்த்தல்!
தாரமென இணைந்தாள் என் உலகிற்கு என் தரம் சொன்னாள்!
தோழியென வந்தாள் என் துன்பம் துடைத்தாள்!
என்னவள் வந்தாள் இல்லறம் தந்தாள் !
என் நடப்பு தோட்டத்தில் காவல்காரியானாள்!
மணம் முடித்தவள்
மனம் புரிந்த தோழியை உணர்ந்தாள்!
தோல்வியில் தோல் கொடுத்தும்
துன்பத்தில் கண்ணீர் துடைத்தும்
நான் சொல்ல நெகிழ்ந்தாள்!
என் தோழியை அவள் தொல்லையென நினைக்கவில்லை!
என் தோழியும் நான் தோழன் என்பதை மறக்கவில்லை !
தோழி என் கை கோர்த்தல்,
மனைவி என் தோல் சாய்ந்தால்!
தூரம் புரிந்தோம் துன்பங்களை மறந்தோம்!
தோழமை என்பதை புனிதமாய் பார்த்தோம்!
திருமணம் முடியுமுன் பெண்தோழி
திருமணம் முடிந்த பின் பெண்ணின் தோழி!
இது வாழையடி வாழையாக தொடர்ந்துவரும்
இந்த நடப்பு சரிப்பட்டு வரும்!
ப.சந்தானபாரதி
முதுகலை கணினி பயன்பாடு.