முன்னும் பின்னும்
திசை தெரியாமல்
திரிந்து கொண்டிருந்தேன்-நீ
வந்த பின்புதான்
என் திசை-நீ
என்று உணர்ந்தேன்.
பாலைவனமாக இருந்த
என் வாழ்வு
உன் நட்பு கிடைத்தால்
இப்போது
சோலைவனமாக
சிரிப்பு மலர்கள் பூக்கின்றன.
என்னையே எனக்கு
அறியாமல் இருந்தேன் -நீ
என்னை எனக்கு
அறிமுகப்படுத்திய பின்புதான்
எட்டுத்திசையிலும்
எந்தன் பெயர்
மூச்சுக் காற்றாக
என்றும் உலாவருகிறது.
எமனையே!
எதிப்பவன் - ஆனால்
உன் நிழலைக் கண்டு
நடுங்குகிறேன்.
முன்பு என்
வாழ்க்கை கனவாக -
இருந்தது - ஆனால்
இப்போது கனவெல்லாம்
நீதான் நிறைந்திருக்கிறாய்.
முன்பு- நான்
எதையாவது படைப்பதற்காக
எழுதினேன் - ஆனால்
இப்போது - நீ
படிப்பாய் என்பதற்காகவே!
படைக்கிறேன்.
நான் என்பது - நீ
செய்த
மந்திரம்
நீ என்பது என்
வாழ்க்கையின் மகத்துவம்...