சுபி முருகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுபி முருகன்
இடம்:  தர்மபுரி ,தமிழ்நாடு, இந்தி
பிறந்த தேதி :  26-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Sep-2015
பார்த்தவர்கள்:  161
புள்ளி:  20

என்னைப் பற்றி...

ஆசிரியர் .

என் படைப்புகள்
சுபி முருகன் செய்திகள்
சுபி முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2016 5:48 pm

முட்டையாக இராதே!
உன்னை
உடைதெறிந்து
உலகினில் வா!

மூடங்கிக்கிடக்காதே!
உனக்குள்ளிருக்கும்
சிறை உடைத்தெரிந்து
சிறகடிக்கும் வானம்
தொட வா!

சோர்ந்து விடாதே!
சோதனைகள் உன்னை
அடைந்தபொழுதினில்
பீனிஸ்சாக
பிறப்பெடுத்து வா!

இருளடைந்ததே!
உன்
இதய குரலில்
சேவல் சூரியனாக
விடியவை!

பறவையின் பாதையில்
கிளையை நம்பி
சிறகில்லை.
தொடுவானம்
உனதெனும் பொழுதினில்
தொட வா நீ!
............................................................சுபி.முருகன், தருமபுரி...............................

மேலும்

இலக்குகளின் எல்லையில் பயணிக்கும் போது எதுவும் இலகுவாக அடையப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Sep-2016 10:02 am
அருமையான கவிதை துளிகள் ... வாழ்த்துக்கள் .... 02-Sep-2016 7:48 am
அருமை நண்பரே அழகான கவி 02-Sep-2016 6:54 am
சுபி முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2016 5:45 pm

எம் மனதிற்குள்
மண்வாசனை
மணக்கிறது - ஆனால்
மழைக்காலமில்லை.

ஊரோம்
உடமெல்லம்
உன்னை உச்சரித்து
சிலிர்கிறது -ஆனால்
குளிர்க்காலமில்லை.

இரத்த நாளங்கள்
உஷ்ணமடைகிறது
உன்னருகிளிருக்கும்
பொழுது- ஆனால்
கோடைக்காலமில்லை.

இதயத்தில்
மீண்டும் துடிப்புகள்
உயிர் பெருகின்றன- ஆனால்
இளவேனிர்க்காலமில்லை.

என்னிலிருந்து
அத்துனை தோல்வி
சருகுகளும்
உதிர்கின்றன-ஆனால்
இலையுதிர்க்காலமில்லை.

எத்துனை காலங்கள்
தோன்றி, மறைந்தாலும்
நம்பிக்கை
வேரில்
இன்னும் ஈரமிருக்கிறது.

..................................................சுபி.முருகன். தர்மபுரி...............................................

மேலும்

காலங்களின் தன்மைகள் வாழ்க்கையில் ஒவ்வொரு அர்த்தத்தை கற்றுத் தருகிறது..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Sep-2016 9:59 am
சிறப்பு!... வாழ்த்துக்கள்... 01-Sep-2016 5:50 pm
சுபி முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2016 5:43 pm

கானல் நீரில்
தாகம்
தீருமா?

காகித
கப்பல்தான்
கரை சேருமா?

பதரில்தான்
பசியாருமா?

உதிர்ந்த
இலைகள்தான்
கிளை சேருமா?

கனவுடன்
வாழ்ந்திட
முடியுமா?

வாழ்வ்வின்
கடைசி வரை
நீ யார்?

கனவுகளே
வாழ்க்கையல்ல...

தோல்விகளே
நிரந்தரமல்ல

எதிர்த்து நின்று போராடு!
நாளை உலகம் உன்னோடு....
......................................................சுபி.முருகன். தர்மபுரி....................................................

மேலும்

எதுவும் நிரந்தரமில்லை உலகில்.. 01-Sep-2016 5:53 pm
சுபி முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2016 2:17 pm

உழைப்பின் இதய துடிப்புகள்.

கல்க்கூட
கடவுளாகின
சிற்பியின் சிந்தனையில்.

விதைத்த
வியர்வைகள்
வைரங்களாயின
விவசாயின் கைகளில்.

இதயங்களை
இணைத்து கட்டியதால்
கலைகளிலே அதிசயமானது
தாஜ்மஹல்!
கலைஞனின் கற்பனையில்.

உல்கின்
இதயம் இயங்குகின்றதே!
உழைப்பாளிகளின்
நம்பிக்கை துடிப்பினால்தான்..!

..........................................................சுபி.முருகன், தருமபுரி.

மேலும்

உண்மைதான்..ஆனால் யாரும் புரிவதில்லை 11-May-2016 10:51 pm
சுபி முருகன் - சுபி முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2016 11:11 am

முட்டி மோதி எழும்
விதைகள் தான்
விருட்சமாகும்
மண்ணில்.....!

அசையும் துடு(டி)ப்பின்
துணையோதான்
ஆற்றைக் கடக்க முடியும்
தோணி....!

வாழ்வில்
விழித்தவனின் பார்வைக்குதான்
தரிசனம் தருகிறார்
இறைவன்.....!

சிறகடிகும்
பறவைகளுக்குதான்
வானம்
வசப்படும்...!

நம்பிக்கை
சக்கரத்தில்தான்
நாளும் சுழலுகிறது
வாழ்க்கை....!

................................................சுபி முருகன்.............................................

மேலும்

நன்றி 25-Jan-2016 1:12 pm
நன்றி 25-Jan-2016 1:11 pm
நன்றி 25-Jan-2016 1:09 pm
நன்றி தோழமையை 25-Jan-2016 1:09 pm
சுபி முருகன் - சுபி முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2016 11:11 am

முட்டி மோதி எழும்
விதைகள் தான்
விருட்சமாகும்
மண்ணில்.....!

அசையும் துடு(டி)ப்பின்
துணையோதான்
ஆற்றைக் கடக்க முடியும்
தோணி....!

வாழ்வில்
விழித்தவனின் பார்வைக்குதான்
தரிசனம் தருகிறார்
இறைவன்.....!

சிறகடிகும்
பறவைகளுக்குதான்
வானம்
வசப்படும்...!

நம்பிக்கை
சக்கரத்தில்தான்
நாளும் சுழலுகிறது
வாழ்க்கை....!

................................................சுபி முருகன்.............................................

மேலும்

நன்றி 25-Jan-2016 1:12 pm
நன்றி 25-Jan-2016 1:11 pm
நன்றி 25-Jan-2016 1:09 pm
நன்றி தோழமையை 25-Jan-2016 1:09 pm
திருமூர்த்தி அளித்த படைப்பை (public) திருமூர்த்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Jan-2016 12:37 pm

நிலவு
கரைகிறது...

வானம்
பொழிகிறது...

காட்டு மூங்கிலின்
முதுகு தடவும்
தென்றல் தேய்கிறது...

தூரத்துப் பறவையின்
முனகல்
குளிரைக் கூட்டுகிறது...

நெஞ்சில்
பசியின் நெருப்பு
கொதிக்கிறது...

வயிற்றில்
வேதனை நெருப்பு
எரிகிறது...

வெறுங்கையை
மூழ்கடிக்க
ஒருபருக்கை
போதும்...

நாவின்
ருசிக்கும்
வயிறின் பசிக்கும்
வறுமை பாலம் அமைக்குமா?

வண்டிமாடு
இழுக்கக் கூட
சாதி பார்க்கிறது
உலகம்...

உலகின்
வயிறு என்னசாதி
எனத் தெரியவில்லை ..!

-திருமூர்த்தி

மேலும்

உணர்ந்து வாசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...! 10-Jan-2016 4:59 pm
மனதை தொட்ட வரிகள் 01-Jan-2016 11:51 pm
வாழ்க்கையின் பள்ளங்களில் மனிதனாகப் பிறந்தவன் விழுந்து எந்திரிக்க வேண்டும் ....ஆனால், இந்த வறுமையின் பள்ளத்தில் இருக்கும் பசியில் விழுந்த சிலருக்கு என்பதைவிட பலருக்கு கேள்விக்குறியாக உள்ளது.... காலம் வரும் வரை காத்திருக்கட்டும்... இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் சர்பான் ..! விரைவில் உனது கனவு மெய்பட நான் கடவுளாக நினைக்கும் இயற்கையிடம் வேண்டுகிறேன்..! 01-Jan-2016 8:09 pm
நன்றி நண்பரே ... 01-Jan-2016 8:06 pm
சுபி முருகன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2015 12:54 pm

உலகம் முழுவதும்
தேடிப்பார்த்தாலும்
உன்னைப் போல்
அழகியை கண்டுபிக்கமுடியாது.

மரத்தின் இலைகளும்
காதலித்து நரைத்த பின்னே
சருகாய் உதிர்கிறது.

நீயும் நானும்
படித்து முடியாத
பக்கங்களில் எதற்கு
காதலெனும் முற்றுப்புள்ளி

நெஞ்சமெனும் நிலத்தில்
நம்மிருவரும் விதைத்த
அன்பின் வித்து இன்று,
வலியெனும் வேராய் எனக்குள்ளும்
சுகமெனும் மரமாய் உனக்குள்ளும் வாழ்கிறது.

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 08-Oct-2015 5:33 am
அருமை 07-Oct-2015 2:45 pm
WOW = Worth Oriented Words(Wisdom Originated Works). Thank YOU my DEAR... 06-Oct-2015 5:48 pm
வசந்த நிலா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Oct-2015 11:48 am

காதலில் இருந்து உதிரும்
ஒற்றை சிறகு
என் மடி தேடி அலையும்

அதன் பாதையெங்கும்
பயணிக்கச்சொல்லி
என் பாதங்களைப்பற்றும்..!

காதலின் இசைக்கருவி
இதயம்தான் என்று..
காதுக்குள் பாடும்..!

காதலின் பூக்கள்
என் தோட்டத்துக்கு ஏங்கும்..!

காதல்
அதன் தேசமெங்கும்
காற்றினில் என்னைச்சுமந்தபடி
உலா வரும்.!

காதல் வானத்தில்
நிலா என்றில்லை
என் நகம் மட்டும்தான்.!

காதல்
கண்ணீர் பருகும்
பறவை இனம் என்ற
இரகசியம் நான் அறிந்ததால்

காதல் தேவதையாக மட்டுமே
நான் இருக்கிறேன் அதன் தேசத்தில்.!

காதலின்
காதலி
நான்.!

மேலும்

தொடரட்டும் உந்தன் காதலின் மகிமை....... 24-Dec-2015 9:42 pm
அழகிய சொல்லாடல் 13-Oct-2015 12:30 am
நல்ல சொல்லாடலில்..இதமான கவிதை...வாழ்த்துக்க ள்..! 07-Oct-2015 5:04 am
அழகிய படைப்பு... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Oct-2015 12:30 am
வசந்த நிலா அளித்த படைப்பை (public) சுஜய் ரகு மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
06-Oct-2015 11:48 am

காதலில் இருந்து உதிரும்
ஒற்றை சிறகு
என் மடி தேடி அலையும்

அதன் பாதையெங்கும்
பயணிக்கச்சொல்லி
என் பாதங்களைப்பற்றும்..!

காதலின் இசைக்கருவி
இதயம்தான் என்று..
காதுக்குள் பாடும்..!

காதலின் பூக்கள்
என் தோட்டத்துக்கு ஏங்கும்..!

காதல்
அதன் தேசமெங்கும்
காற்றினில் என்னைச்சுமந்தபடி
உலா வரும்.!

காதல் வானத்தில்
நிலா என்றில்லை
என் நகம் மட்டும்தான்.!

காதல்
கண்ணீர் பருகும்
பறவை இனம் என்ற
இரகசியம் நான் அறிந்ததால்

காதல் தேவதையாக மட்டுமே
நான் இருக்கிறேன் அதன் தேசத்தில்.!

காதலின்
காதலி
நான்.!

மேலும்

தொடரட்டும் உந்தன் காதலின் மகிமை....... 24-Dec-2015 9:42 pm
அழகிய சொல்லாடல் 13-Oct-2015 12:30 am
நல்ல சொல்லாடலில்..இதமான கவிதை...வாழ்த்துக்க ள்..! 07-Oct-2015 5:04 am
அழகிய படைப்பு... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Oct-2015 12:30 am
சுபி முருகன் - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2015 3:20 am

பிறந்தது முதல்
விபரம் தெரியும் நாள் வரை
பொம்மைகளோடு வாழ்வோம்...

பொம்மையைக் கொடுத்தால்...
அழுவதை நிறுத்தியிருப்போம்
பிடிவாதத்தை அடக்கியிருப்போம்
வலியை மறந்து சிரித்திருப்போம்
பசியெடுக்காவிட்டாலும்
பால்சோறு சாப்பிட்டு முடித்திருப்போம்
தாலாட்டு இல்லாமல் கூட
தூங்கி விழித்திருப்போம்
முக்கியமாக
சொல்வதெல்லாம் கேட்டுத் தொலைத்திருப்போம்....

விபரம் தெரிந்த நாள்முதல் இறக்கும்வரை
பொம்மைகளைப் போலவே வாழ்வோம்...

ஆசிரியர்களின் கற்பித்தலில்
ஆமாம் போட மறப்பதில்லை
தலைவர்களின் அதட்டல்களில்
தலையாட்ட மறுப்பதில்லை
மருத்துவர்களின் கேள்விகளில்
மனதில் எதையும் மறைப்பதில்லை
முதலாளிகளின

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 05-Sep-2015 10:49 pm
மிக்க நன்றி தோழமையே... மிக சிறந்த புரிதல் கருத்திலும் வாழ்த்திலும் மிக்க மகிழ்ந்தேன்... 05-Sep-2015 10:48 pm
மிக்க நன்றி நண்பரே.. வாழ்த்தில் மகிழ்ந்தேன்... 05-Sep-2015 10:47 pm
மிக்க நன்றி நண்பரே.... வாழ்த்தில் மகிழ்ந்தேன்... 05-Sep-2015 10:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (16)

user photo

rameshalam

mayiladuthurai
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (16)

மேலே