தெரியவில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
நிலவு
கரைகிறது...
வானம்
பொழிகிறது...
காட்டு மூங்கிலின்
முதுகு தடவும்
தென்றல் தேய்கிறது...
தூரத்துப் பறவையின்
முனகல்
குளிரைக் கூட்டுகிறது...
நெஞ்சில்
பசியின் நெருப்பு
கொதிக்கிறது...
வயிற்றில்
வேதனை நெருப்பு
எரிகிறது...
வெறுங்கையை
மூழ்கடிக்க
ஒருபருக்கை
போதும்...
நாவின்
ருசிக்கும்
வயிறின் பசிக்கும்
வறுமை பாலம் அமைக்குமா?
வண்டிமாடு
இழுக்கக் கூட
சாதி பார்க்கிறது
உலகம்...
உலகின்
வயிறு என்னசாதி
எனத் தெரியவில்லை ..!
-திருமூர்த்தி