இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

2015ம் வருடம் விடை பெற்று கொண்டது நேற்றோடு ........

நம்மில் விடை இல்லாத பல வினாக்களை தந்துவிட்டு .....

ஆம் சில பல கனவுகள்,

கனவுகளாகவே ......... கை கூடாமல் ....

இன்னும் சிலருக்கோ

வாழ்வில் கனா காணாவும் நேரம் இல்லாமல் ....

சிலருக்கோ உயரங்கள் தந்து ......

சிலருக்கோ துயரங்கள் தந்து ......

வறட்சி ஒரு புறம் ......

வெள்ளம் ஒரு புறம்,,,,,,,

இன்னும் இன்னும் என

வாழ்வின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் சொல்லி

2015ம் வருடம் விடை பெற்று கொண்டது நேற்றோடு ...

இன்றோ ....

இறையருளோடு பிறந்துவிட்டது புத்தாண்டு ......

புதிதாய் பிறப்பது புத்தாண்டாய் மட்டும் இன்றி

நாமும் பிறப்போம் .... புதிதாய் ......

ஆம் .......

அன்பும் பண்பும் ...

பணிவும் துணிவும் .....

மனிதமும் ,,, புனிதமும் கொண்டு ....

புத்தம் புது மனிதராய் நாமும் பிறப்போம் என் தோழா ......

எது வசதியானதோ அதைச் செய்யாதே!

எது சரியானதோ அதைச் செய்!'

என என்றோ ஆன்றோர் சொல்லிய வாசகம் நினைவில் வை

அறியாமல் தவறுகள் செய்தால் திருத்தி விடு ....

அறிந்தே செய்தால் வருத்தி எடு .....

ஊழலும் குற்றங்களும் மலிந்து போனதாக வாசகம் சொல்கிறது ....

மலிந்து போனது ஊழல் அல்ல மனிதம் தான் ......

ஆம் மெல்ல சாகும் நம் மனிதம் தனை மீட்டெடுப்போம் என் தோழா

எதை இழந்தோம் என்பதல்ல - இன்னும்

என்ன மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம்....

துணிந்து சென்றால் வெற்றியும்

பணிந்து சென்றால் புகழும்

என்றென்றும் நம் கரங்கள் சேரும் .....

ஆம் புதிதாய் பிறப்பது புத்தாண்டாய் மட்டும் இன்றி

புத்தம் புது மனிதராய் நாமும் பிறப்போம் என் தோழா

இறையருளால் ......

நலமும் வளமும் மகிழ்வும் மங்களமும்

எல்லோரும் எல்லாமும் பெற்று .....

இனிதாய் வாழ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

எழுதியவர் : கலைசரண் (1-Jan-16, 12:42 pm)
பார்வை : 906

மேலே