எண்ணத்தில் துளிர்த்தவை - 2

கையேந்திய நிலையில்
சாலையில் மூதாட்டி .!
பரிவுடன் விசாரித்தேன்
தள்ளாத வயதில் ஏனென்று .!

பிழைக்கவும் வழியில்லை
தாங்காத பசியென்றாள் .!
உழைத்திட முடியவில்லை
உணராது வயிறென்றாள் .!

பரிவுடன் கொடுத்தேன்
பத்துரூபாய் தாள்ஒன்று .!
உறவுகள் இல்லையா
உதவிட உனக்கென்றேன் .!

மகன்கள் இருவர் உண்டு
காரிலே செல்வர் இப்பக்கம் .!
கண்டும் காணாததாய்
திரும்பாமல் என்பக்கம் .!

சுமந்தேன் அவர்களை அன்று
சுமையாம் அவர்களுக்கு இன்று .!
ஒதுக்கிட்டனர் என்னை
ஒருவழியாய் இறுதியில் .!

துடைத்தேன் கண்ணீரை
பாட்டியின் கண்களில் .!
உடைந்தது என்னிதயம்
வழிகிறது இரத்தமும் .!

இருந்துதான் பயனென்ன
இதயமிலா இதயங்கள் .!
வாழ்வதின் அர்த்தமென்ன
வருந்தாத உள்ளங்கள் .!

பெற்றுடுத்த தாயைவிட
பெரிதென்ன உங்களுக்கு .!
வந்திடலாம் இந்நிலையும்
வருங்காலத்தில் உங்களுக்கு .!

பழனி குமார்
01.01.2016

எழுதியவர் : பழனி குமார் (1-Jan-16, 4:12 pm)
பார்வை : 431

மேலே