காதல் குறுங்கவிதை தொடர் -04 -முஹம்மத் ஸர்பான்

உலகம் முழுவதும்
தேடிப்பார்த்தாலும்
உன்னைப் போல்
அழகியை கண்டுபிக்கமுடியாது.
மரத்தின் இலைகளும்
காதலித்து நரைத்த பின்னே
சருகாய் உதிர்கிறது.
நீயும் நானும்
படித்து முடியாத
பக்கங்களில் எதற்கு
காதலெனும் முற்றுப்புள்ளி
நெஞ்சமெனும் நிலத்தில்
நம்மிருவரும் விதைத்த
அன்பின் வித்து இன்று,
வலியெனும் வேராய் எனக்குள்ளும்
சுகமெனும் மரமாய் உனக்குள்ளும் வாழ்கிறது.