திருமணமான ஆணும் பெண்தோழியின் நட்பும்
நட்பின் இலக்கணமே -நம்
தேவையின் போது உதவுவதே -ஆம்
தேவையின் போது உதவுவது நட்பு
தேவைக்கு அதிகமாக உதவுவது காதல் -அன்று
அதியமான் ஒளவையின்மீது கொண்டது
அளப்பரிய பற்று-ஆனால்
ஷாஜஹான் மும்தாஜ் மீது வைத்தது
அளவற்ற காதல் -இந்த
இரண்டிற்கும் இடையே நாம்
காணும் ஓர் ஒற்றுமை
அளவு -அந்த
அளவினை மீறும் இடமே -ஓர்
ஆண் பெண் நட்பு
களங்கம் அடையும் இடம் .
ஆண்டவன் அளந்தே வைத்தான்
வாயையும் நாவையும்
வசதியையும் -நமக்கு
அதுபோலவே
வாழ்க்கை துணையையும்
சேர்த்தே வைத்தான் .
குணத்தில் தந்திரமுள்ளது தான் நரி -ஆனால்
கற்பில் சிறந்தது
ஓர் நரி இறக்க -அதன்
துணை நரி தனித்தே வாழுமாம்
ஆனால்
அறிவற்ற மனிதனோ
ஆசைக்கு ஒன்றும்
ஆஸ்திக்கு ஒன்றும் -என
இனிய ஓர் வாழ்வை
இழிவாய் கழிக்கிறான்
வசந்தத்தை தேடி
வாழ்வில் வலியைப் பெறுகிறான்
அங்கே கலங்கமடைகிறது-ஓர்
ஆண் பெண்ணின் நட்பு
ஓர் ஆண் ஓர் பெண்ணை எப்போதாவது
சந்திக்கும் சந்திப்பை
மக்கள் குறை
கூறுவது இல்லை
எப்போதுமே சந்திப்பதை தான்
குறை கூறுவார் -அங்கு தான்
ஓர் ஆண் பெண் நட்பு
கலங்கமடைகிறது -அந்த
எப்போதாவது என்பது நட்பு
எப்போதுமே என்பது காதல்
இவற்றை சரிவர தெரிந்த
மனிதனே சத்தியவான்
அவன் அவள் -நட்பை
இவ்வுலகமும் உயர்த்தும்
வரலாறும் போற்றும்!
அந்த நட்பிற்கு
ஏது களங்கம்!