பின்னல்
எண்ணெய் முடியானாலும்
அவள்
பின்னலைப் பின்னும் போது
பின்னிப் பிணைந்து கொள்கிறது
என் இதயம்
அவள் பின்னிய பின்னலை
முன்னால் போடும்போது
தோள்களில் இருந்து
இறங்கும் கருப்பு அருவிக்குள்
மூழ்கிப் போய் மூர்ச்சையாகிறது
என் மனம்
அவள் பின்னிய பின்னலை
பின்னால் போடும்போது
அவளின் முதுகுமெத்தையில்
வேண்டுமட்டும் விளையாடிக் கொள்கிறது
என் உணர்வு
அவள் பின்னிய பின்னலை
கொண்டையாய் போடும்போது
அந்தப் பின்னலைப் போலவே
வாலைச் சுருட்டி
வைத்துக் கொள்கிறது
என் குறும்பு
இயற்கைத் தனமாய்
அப்படிச் சொன்னாலும்
இலக்கியத் தனமாய்
இப்படியும் சொல்கிறேன்
பின்னல்....
பெண்கொடியின்
நிலம் தொடாத
கரு விழுதுகள் .