இதழோடு இதழ்சேரும் நேரம்

வாவாவா வாவாவா மென்றிடும் நாணுடைத்து
வாவாவா வாவாவா வென்றிடுங் காதலினால்
வாவாவா வாவாவா என்னுள்ளத் தீயணைக்க
வாவாவா முத்தமிடு வா

இது எழுத்து மடக்கு வெண்பா

இதன் பதம்-1
வாஅவாவா ஆவாவா மென்றிடும் நாணமுடைத்து
6வா=அறுவா வென்றிடுங் காதலினால்
3வா=மூவா(இளமை) வாவாவா என்னுள்ளத் தீயணைக்கவா
வாவா முத்தமிடு வா
பொருள்:- வா காதலா ஆவாவாம்(ஆகாதாம்) மென்றிடும்(மென்றுவிடும்)
நாணத்தை உடைத்து காதலினால் அறுவா(அறுத்து விட்டு வா) வென்றிடு இளமையே என்னுள்ளத்தீயை அணைக்க வா வாவா முத்தம் இடு வா.

பதம்-2
வாஅவாவா ஆவாவா மென்றிடும் நாணமுடைத்து
3வா=மூவா(இளமை) வாவாவா வென்றிடுங் காதலினால்
6வா=ஆறுவா(தணிப்பாய்) ஆற்றுவா என்னுள்ளத் தீயணைக்கவா
வாவா முத்தமிடு வா
பொருள்:- வா காதலா ஆவாவாம்(ஆகாதாம்) மென்றிடும்(மென்றுவிடும்)
நாணத்தை உடைத்து இளமை வென்றிடுங் காதலினால் என்னுள்ளத் தீயணைக்கவா ஆறுவா(தணிப்பாய்) ஆற்றுவா
வாவா முத்தமிடு வா
என்றும் பொருள் கொள்ளலாம்…

அது சரி தலைப்பை காணோமே தேடுகிறீகளா? அதுவும் இதோ

வாவா =2வா=இருவா-இருவா(ய்) முத்தம் இடு வா
இதழோடு இதழ்சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்…..
(யகர மெய் மறைந்து ஒலிக்கும்)
வா என்ற எழுத்து 22 முறைகள் வந்து மடக்காகி பொருள் தந்தது

எழுதியவர் : சு.ஐயப்பன் (10-Sep-15, 8:20 pm)
பார்வை : 248

மேலே