பிரிவு
எண்ணங்கள் மேகக்கூட்டங்கள்.
சிறியன பெரியனவாய் இடம் பெயர்ந்து
மறைந்துகொண்டே இருக்கும்.
இடையிடையே நீலவானம்.
நீலவானம் இறையின் தன்மை.
நீர் கொள்ளாத மேகத்தினால்
நன்மைகள் இல்லை.
வெற்று மேகங்கள் அழகிய
பஞ்சு மெத்தைகள்.
கண்டு ரசிக்க மட்டுமே விருந்து.
இயற்கையில் வெற்று மேகங்கள்
குளிர்வு கொண்டவை.
உயர உயர மிதந்து மேகக் குளுமை
கடந்து முழு நீலவானம்.
எண்ணச் சுழற்சியினின்று விடுதலை.
நீ சேர்ந்துவர மறுத்தமையால்
உன்னிலிருந்தும் நிரந்தரத் தீர்வு.
தெளிந்த உணர்வுகள், உணரவைத்தமைக்கு
உள்மன வாழ்த்துக்கள்
வாழ்நாள் முழுமைக்கும்.