காதல் ஜாக்கிரதை

இடம் பொருள் ஏவல்
பார்த்து பேசினால் தான்
பிரச்சினை இருக்காது !

அழகு அந்தஸ்து சாதி மதம்
பார்த்து காதலிச்சா தான்
காதல் கை கூடும் !

கிளி போல் பேசும் மனைவி
உன்னிடம் மட்டும் பேசினால் தான்
பிரச்சினை இருக்காது !

கல்யாணத்திற்கு முன்னும் பின்னும்
நீ பேசும் வார்த்தையில் இருக்கும் வித்தியாசம்
உன்னை மிரட்டும் விரட்டும் உருட்டும் !

வீட்டுக்குள்ளே குழப்பம்
மனசுக்குள்ளே புழுக்கம்
நிம்மதி இருக்காது !

தனிமையில் இனிமையில்லை
கூட்டு குடும்பத்தில் கவலை இருந்தாலும்
மனம் சாந்தி பெறும்,

இவை அனைத்தும் உணராமல்
நீ நடந்தால் நிச்சயம் நிற்பாய் முச்சந்தி!

எழுதியவர் : செல்வமணி (12-Sep-15, 10:40 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kaadhal jaakirathai
பார்வை : 68

மேலே