அரசியல்

ஆலங்கட்டி மழை போல அதிசயமா வந்தாங்க
தார தப்பட்ட எல்லாம் தாறுமாறா வச்சாங்க
சேரி நாத்தத்துல செண்டு அடிச்சி வந்தாங்க
கார நிப்பாட்டி கால் நடையா வந்தாங்க
ஆரத்தி எடுக்குறவங்களுக்கு 1000 தந்தாங்க
ஆளு வச்சி அவர அவங்களே புகழ்ந்தாங்க
தார் ரோடு தண்ணி தரன்னு தாராளமா சொன்னங்க
எங்க குடிசையை எரிச்சிவிட்டு அனைச்சாங்க
எங்க வித அனைச்சிவிட்டு எரிச்சாங்க
தேர்தல்ல ஜெயிக்க தெரியாம ஒட்டு கேட்டாங்க
ஒட்டு போட்ட எங்கள சாகடிக்கிறாங்க
மாடு பசி போக்க சுவத்துல சுவரொட்டி
என் பசி போக்க யாரும் வரல கை நீட்டி
ஆயிரம் அப்பாவுக்கு
அண்டாங்குண்டாம் அம்மாவுக்கு
எனக்கு ஒன்னும் தரல ஏன்னா எனக்கு
பத்து வயசு ( அம்மா பசிக்குது )

எழுதியவர் : கார்த்திகா (12-Sep-15, 2:51 pm)
Tanglish : arasiyal
பார்வை : 62

மேலே