கார்த்திகா பாஸ்கரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திகா பாஸ்கரன்
இடம்:  mayiladuthurai
பிறந்த தேதி :  06-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Aug-2015
பார்த்தவர்கள்:  264
புள்ளி:  54

என்னைப் பற்றி...

வணக்கம் எனது பெயர் கார்த்திகா. என்னிடம் நெருக்கமானவர்கள் கார்த்தி என்று அழைப்பார்கள் . எனக்கு என்னிடம் பிடித்த விஷயம் கவிதை, எனது பேச்சு, எனது கற்பனை திறன். எனக்கு கவிதை எழுதும் திறமை கவிதை மூலமாக தெரியவில்லை அடுத்தவர்களை எதுகை மோனையோடு கிண்டலும் கேலியும் செய்யும் போது தான் உணர்ந்தேன். விளையாட்டாக தோழிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க பதினொன்றாம் வகுப்பில் கவிதை போட்டியில் கலந்து கொண்டேன் இரண்டாம் பரிசு பெற்றேன். அன்று ஆரம்பித்தது கவிதையின் மேல் உள்ள ஆர்வம். பன்னிரண்டாம் வகுப்பில் முதல் இடம் பெற்றேன். அடுத்த பரிசு கல்லூரியில், பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இணைந்துள்ள அனைத்து கல்லுரிகளுக்குள் அதாவது கல்லுரிக்கி ஒருவர் வீதம் 52 கல்லூரியிலிருந்து வந்த 52 மாணவ மாணவிகளோடு போட்டியிட்டு பாரதிதாசன் பல்கலைகழகத்தில் கவிதை போட்டியில் 5ம் இடம் பெற்றேன். எனது கவிதையில் பிழை கண்டுபிடிபவரிடம் எனது கவிதையை காண்பிப்பேன் அவர் குறை சொல்லமுடியாத அளவிற்கு இருந்தால் மட்டுமே எனது கவிதையை மற்றவரிடம் காட்டுவேன். நான் கவிதை எழுதுவது என் வீட்டில் உள்ள யாருக்கும் பிடிக்காது ஏனெனில் பெண் கவிதை எழுத கூடாதாம். அன்றிலிருந்து எனது கவிதை வெறும் க(வி)தையாகிவிட்டது . என் கதையை மீண்டும் கவிதையாக்க முயல்கிறேன். எனது கவிதையை அனைவரும் புகழ வேண்டும். எனது கவிதைக்கென்று தனி மரியாதை கிடைக்க வேண்டும். என் கவிதை மூலமாக எனக்கொரு தனி அடையலாம் வேண்டும். அது கிடைக்கும் வரை எழுதுவேன் கவிதையாக....

என் படைப்புகள்
கார்த்திகா பாஸ்கரன் செய்திகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) Seeralan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Jan-2016 10:23 pm

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 5"எனும் எண்ணக் கவித் தொடரில் இன்றும் ஒரு படம் இங்கே தரப்பட்டுள்ளது.நீண்ட நாட்களின் இடைவெளியில் காத்திருக்கும் காதலர்கள் சேரும் வேளை அவர்களை அறியாமலே உயிர்கள் ஒன்றோடு ஒன்று இணைய கைகளும் தோள்களை கட்டி அணைத்துக் கொள்கின்றன.மேலே தரப்பட்ட படத்தை கண்டவுடன் உங்கள் சிந்தையில் எழும் எண்ணத்தை கவியாக செதுக்கி இங்கே பதிவு செய்யுங்கள்.உங்கள் எழுத்துக்களுக்காக காத்திருக்கும் கண்களும் மனதும் 

மேலும்

அழகான வரிகள் இணையும் கைகளின் மோதிரம் மாற்றிக் கொள்ளும் மனது காதல் அதை அழகாக சொல்லும் விதம் இன்னும் நயமிக்கது எண்ணச் சுடரும் வண்ணக்கவியும் எனும் பாகத்தில் உங்கள் கவிதையும் காண ஆசைப்படுகிறேன் 10-Feb-2016 1:02 pm
இதயத் துடிப்பின்றி இருக்கும் நொடிகண்டு விதவைக் குணங்கொள்ளும் காதல் - விழி உதயத் திறப்புக்குள் உயிரின் கனாக்கண்டு உடலை விட்டோடும் மோதல் ! பருவத் துளிரோடு படுரும் உணர்வுக்குள் பகையை வளர்க்கின்ற ஊடல் - மனம் இருமைத் தனம்மாற்றி இறுக்கம் அடைந்தாலே இளமை கொடுத்தேகும் கூடல் ! மண்ணில் இருக்கின்ற மலரின் இதமாக மனதை நிறம்மாற்றும் சாயம் - சிலர் கண்ணில் வழிந்தோடும் கண்ணீர் குளிர்ந்தாலும் காலம் அழிக்காத காயம் ! தனிமைச் சிறைபட்டுத் தவிக்கும் நெஞ்சுக்குள் தன்னை விடுவிக்கும் முனைப்பு - உடல் இனிமைச் சுகங்கண்ட இளமை மறைந்தாலும் இறுக்கம் தளர்த்தாது அணைப்பு ! 10-Feb-2016 2:08 am
உங்கள் பார்வை கிடைத்தது மிகவும் ஆனந்தம் தருகிறது எண்ணச் சுடரும் வண்ணக்கவியும் எனும் பாகத்தில் உங்கள் கவிதையும் காண ஆசைப்படுகிறேன் 28-Jan-2016 11:59 am
காதல் கவிதை மழை பொழிகிறது பலரது படைப்பும் படித்து பகிர்ந்துகொண்டோம் . நன்றி . 28-Jan-2016 4:27 am
கார்த்திகா பாஸ்கரன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2016 10:20 am

பேச்சு சிறந்தது தானே..!
ஆனாலும் ஏனோ

சிலரிடம் பேச முடிவதில்லை
சிலரிடம் பேசப் பிடிப்பதில்லை

சிலரிடம் மட்டும் பேசப் பிடிக்கிறது
சிலரிடம் பேசினால்தான் பிடிக்கிறது

சிலரிடம் பேசிப் பயனில்லை
சிலரிடம் பேசித்தான் ஆக வேண்டியிருக்கிறது.!

இன்னும் ஒன்று,
.................................................
இதெல்லாம் பேசிய பிறகுதான் தெரிய வருகிறது.

மேலும்

உண்மை தான் தோழரே 24-Jan-2016 2:48 pm
பேசினால் தெரிந்துகொள்ளலாம் பேசுபவரின் அகவரியை .அருமை 24-Jan-2016 1:40 pm
ஆம்...... "தனிமையில் சிந்திப்பதில் கவனமாய் இரு கூட்டத்தில் சிந்தும் வார்த்தையில் கவனமாய் இரு " என்பது முன்னோர் வாக்கல்லவா........ அருமை தொடரட்டும் அன்பரே...... 24-Jan-2016 10:36 am
ஏதோ உணரப்பட்ட அனுபவம் போல உள்ளதே 24-Jan-2016 10:25 am
செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jan-2016 7:25 am

என் ரகசியமானவனுக்கு
பகிரங்கமாய் ஒரு கடிதம் !

என்
உயிரை மட்டும்
உறிஞ்சி எடுக்கும்
வினோத அன்னங்கள்
உன் விழிகள் !

என்
மௌனம், மொழி
இரண்டையும் கொல்லும் ( கொள்ளும் )
இச்சை தீ
உன் இதழ்கள் !

என்
இரவுகளை வேய்ந்துகொள்ளும்
இதமான குளிர்
உன் ஸ்பரிசங்கள் !

நீ என்
நிழலோடு கூட
உடன் வர மறுக்கிறாய்
நானோ உன் நினைவுகளோடு
நித்தமும் உடன்கட்டை ஏறுகிறேன்...

சற்று விபரிதமானதுதான்
இந்த காதல் தொற்று
ஆதியில் பக்கம் வந்தது
அந்தியில் வெட்கம் தின்றது
அடுத்தது என்னாகுமோ ??

இவையனைத்தும்
உனக்கும் எனக்குமான வெளியில்
எனக

மேலும்

மிக்க நன்றி நட்பே ! தம் வரவில் மகிழ்கிறேன் !!! 04-Apr-2016 6:36 pm
என் மனம் கவர்ந்த வரிகள் "நீ என் நிழலோடு கூட உடன் வர மறுக்கிறாய் நானோ உன் நினைவுகளோடு நித்தமும் உடன்கட்டை ஏறுகிறேன்" அருமை...!!! ஒருதலை காதலின் உணர்ச்சிகள் மிகுமிகுந்த வரிகள்... 03-Apr-2016 9:10 pm
மிக்க நன்றி தோழி !!! உண்மையில் உங்கள் வருகைக்காக மிகவும் காத்திருந்தேன் ... இப்போது மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகையாலும் ,கருத்துகளாலும் !!! 02-Feb-2016 6:58 pm
//நீ என் நிழலோடு கூட உடன் வர மறுக்கிறாய் நானோ உன் நினைவுகளோடு நித்தமும் உடன்கட்டை ஏறுகிறேன்... சற்று விபரிதமானதுதான் இந்த காதல் தொற்று ஆதியில் பக்கம் வந்தது அந்தியில் வெட்கம் தின்றது அடுத்தது என்னாகுமோ ?? // அசத்தல்.....நவீன கசல் ரகசியங்களில் மூழ்கித் தெளிந்திட்ட வரிகள்....அழகு நட்பே ... 02-Feb-2016 6:53 pm
கேஅசோகன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Jan-2016 12:30 pm

கவிஞனாய் மாறிட வேண்டும்


மார்கழி பனித்துளி நீரென
மாறியே புல்லிடை இருத்தல் வேண்டும் – அந்த
பனித்துளி நீரினை பகலவன்
பருகும் நிலையினைப் பெறுதல் வேண்டும்!

ஊரது கோடியில்
ஊருணியாய் வளைந்தே பாயவேண்டும் – அந்த
ஊருணி நீரினில் ஓடிவிளையாடி
ஊற்றினைச் சுவைத்திடும் சிறுவனாய் மாற வேண்டும்!

மாலைக் கதிரவன் மேற்கே
மறையும் பொழுதினில் செவ்வண்ணமாய் ஆக வேண்டும்- அந்த
செம்மையில் மூழ்கிடும் சிகரங்களில்
சீர்மிகு சோலைகளாய் மாற வேண்டும்!

சோலைகளின் சலசலப்பில்
சுகமான தென்றலது சிலிர்ப்பென மாற வேண்டும் – அந்த
சிலிர்ப்பினில் இளைப்பாறி இமைமூடி
சிருங்கார கனவுகள் காண வேண்டும் !

காதலது போதையிலே
கண்மூ

மேலும்

தங்களின் சாட்சிக்கு நன்றி 24-Jan-2016 10:03 pm
நான் சாட்சி சொல்கிறேன் நீங்கள் கவிஞர் என்று 24-Jan-2016 9:17 pm
மிக்க நன்றிகள் 24-Jan-2016 6:28 pm
வாழ்த்துக்கு நன்றி 24-Jan-2016 6:27 pm
கார்த்திகா பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2016 2:24 pm

நீ நகம் கடிக்கும் அழகில்
நான் வெட்கப்பட்டேன் .....
---------------
குளத்திற்கு தெரியவில்லை
குளிக்கும் நீ ஓர் தாமரை என்று.....
-------------

கண்கள் வடிக்கிறது கண்ணீர்
உன் கண்னங்களை தொட .....
-------------
வரம் கேட்பேன்
நான் சுவாசிக்கும் காற்று
நீ வெளியிடும் காற்றாக
வேண்டும் என்று......
----------
நீ தமிழச்சி என்பதை மறந்தேன்
நான் அறிமுகமாக கை நீட்டிய போது
வணக்கம் வைத்த நீ .....
-----------
திருடனாய் நுழைந்தேன்
நீ தழை வாரிய சீப்பில்
தலை முடி திருட ....
--------------
பிழைக்கமாட்டேன் காதல் நோயில்
சிக்கிய நான் .......

மேலும்

எதைச் சொல்ல மிகவும் அழகு அனைத்தும் காதல் வயப்பட்ட எழுத்துக்கள் நெஞ்சோடு ஏதோ பேசுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jan-2016 9:54 pm
வாழிய பல்லாண்டு....... அருமை தொடரட்டும்....... 24-Jan-2016 4:50 pm
ம்ம்ம்ம்ம்ம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 24-Jan-2016 4:20 pm
சில இடங்களில் இன்னும் சிறப்பாய் வெளிப்படுத்தி இருக்கலாம். எழுத்துப்பிழைகள் தவிர்த்தால் நலம் தழை - தலை தேர்வெழுதுவதை மறந்துவிட்டு எழுதினேன் தேர்வறையில் கவிதை நீ தமிழச்சி என்பதை மறந்தேன் நான் அறிமுகமாக கை நீட்டிய போது வணக்கம் வைத்தபொழுது ... பிழைக்கமாட்டேன் நான் பிடித்து பீடித்திருப்பது காதல் நோய் .. 24-Jan-2016 3:48 pm
கார்த்திகா பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2016 4:09 pm

விலங்குகள் கூட வேட்டையாடியதில்லை அதன் இனத்தை
ஆனால் ஆண் வேட்டையாடுகிறான் பெண் இனத்தை

உடுத்திய உடையில் விலகிய துணியை
விழித்து பார்க்கும் ஓநாய்கள் சில .....

ஆணை நம்பி உடன் வந்து நாசமாய்
போன பெண்ணின் வாழ்க்கை பல ....

தந்தையும் தமையனும் போதையில்
தள்ளாடி தாறுமாறாய் போன நாட்கள் சில ....

பேச தெரிந்தும் வீட்டிற்க்குள் ஊமைக்கிளியாய்
வாழ்ந்த நாட்கள் பல .....

உயிர் வாழ உணவில்லாமல் வீட்டிற்க்குள்
ஒடுங்கி வாழ்ந்த நாட்கள் சில ...

ஊராரிடம் உதவி கேட்க கெளரவம்
தடுத்த நாட்கள் பல ......

வெயிலில் வியர்வை மறைய வீட்டில் விசிறி இல்லை
மழையில் பிடிக்க வீட்டிற்கே குடையில்லை ...

மேலும்

உண்மையில் இக்கவியின் நகர்வு எனக்குள் பல சிந்தைகளை தருகிறது பெண்ணின் வாழ்க்கை இந்த மண்ணில் முடக்கப்பட்டு விட்டது என்பது உங்கள் வரிகள் மூலம் மிகத்தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jan-2016 9:17 pm
கார்த்திகா பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2016 2:49 pm

அன்று
என் மனம் மணம் வீசியது
நீ இருந்ததால்

இன்று
நான் இருந்த இடம் மணம் வீசியது
நீ இல்லாததால்

கண்திறந்து பார்த்தேன் முன் கல்லறை
பாதியில் எனை விட்டு சென்றதால் நீ

சொர்கத்தை காட்டும் காதல்
உண்மை அர்த்தம்

காதலித்தால் கண்டிப்பாக மரணம்
ஏமாந்தவர்களுக்கு நரகம்
ஏமாற்றியவர்களுக்கு சொர்க்கம்

எனக்கு எதுவென்று தெரியாமல்
சொர்கத்தில் இருந்து கொண்டே
நரகத்தில் வாழ்கிறேன் ........

மேலும்

ஆமாம் காதல் பிரிவு என்பது உள்ளத்தால் தாங்க முடியாத காயம் தான் ஆனால் இந்த மண்ணில் காதலின் இலக்கணத்தையும் மாற்றி விட்டார்களே! 10-Jan-2016 9:46 pm
கார்த்திகா பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2016 2:38 pm

விழிகளின் ஓரமாய் வழிகிறது கண்ணீர்

காரணம் கேட்கவும் ஆளில்லை

காரணம் கூறவும் வார்த்தையில்லை

வசனங்களால் சொல்ல இது கதையுமில்லை

வார்த்தைகளால் சொல்ல இது கவிதையுமில்லை

மௌனத்தால் மட்டுமே சொல்ல முடியும்

மனதால் மட்டுமே அறிய முடியும்

உயிரால் மட்டுமே உணரமுடியும்

உயிரே எனை விட்டு பிரியாதே

மேலும்

காதல் உயிரும் உயிரும் பேசும் மொழி அதை விட எந்த மொழியும் அழகு இல்லை 10-Jan-2016 9:44 pm
இன்னும் கொஞ்சம் கவித்துவம் கொட்டிக்கூட்டிக்கொள்ளலாம் !!! 10-Jan-2016 5:44 pm
கார்த்திகா பாஸ்கரன் - க முரளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2015 2:24 pm

மதம் ஒரு சிறைச்சாலை

மேலும்

கிடைத்ததென்று எவன் சொன்னான்
சுதந்திரம்
கிடைக்காமல் தவிக்கின்றனர் பலர்
தினம் தினம்
ஒற்றை ஆடையை உடம்பில் உடுத்தி
உழைக்கும் உழவனுக்கு உணவில்லை
நள்ளிரவில் கிடைத்த சுதந்திர நாட்டில்
தனித்து நடக்க பெண்ணுக்கு தைரியமில்லை
சிரித்து விளையாடிய குழந்தையிடம்
சீறி பாய்ந்த வஞ்சகர்களை சுட்டு தள்ள
அதிகாரிகளுக்கு உரிமையில்லை
பசுமை நிறைந்த நாட்டில் ஏழைகளின்
பஞ்சத்தை போக்க எவர

மேலும்

வாழ்த்துக்கள் 31-Dec-2015 1:43 am
நல்லாயிருக்கு அக்கா 12-Sep-2015 6:15 pm
கார்த்திகா பாஸ்கரன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
12-Sep-2015 2:51 pm

ஆலங்கட்டி மழை போல அதிசயமா வந்தாங்க
தார தப்பட்ட எல்லாம் தாறுமாறா வச்சாங்க
சேரி நாத்தத்துல செண்டு அடிச்சி வந்தாங்க
கார நிப்பாட்டி கால் நடையா வந்தாங்க
ஆரத்தி எடுக்குறவங்களுக்கு 1000 தந்தாங்க
ஆளு வச்சி அவர அவங்களே புகழ்ந்தாங்க
தார் ரோடு தண்ணி தரன்னு தாராளமா சொன்னங்க
எங்க குடிசையை எரிச்சிவிட்டு அனைச்சாங்க
எங்க வித அனைச்சிவிட்டு எரிச்சாங்க
தேர்தல்ல ஜெயிக்க தெரியாம ஒட்டு கேட்டாங்க
ஒட்டு போட்ட எங்கள சாகடிக்கிறாங்க
மாடு பசி போக்க சுவத்துல சுவரொட்டி
என் பசி போக்க யாரும் வரல கை நீட்டி
ஆயிரம் அப்பாவுக்கு
அண்டாங்குண்டாம் அம்மாவுக்கு

மேலும்

உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் 31-Dec-2015 1:41 am
நன்றி தோழரே 15-Dec-2015 3:48 pm
நன்றி தோழரே 15-Dec-2015 3:48 pm
நன்றி தோழரே 15-Dec-2015 3:47 pm
சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) நவின் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

போட்டி விவரங்கள்

1.ஒரு திருமணமான ஆண், அவன் பெண் தோழியுடன் நட்பு சரிப்பட்டு வருமா ?
நியாமான நட்புக்கு ஏது களங்கம்?.
மெல்லிய இடைவேளையில் நட்பு .. போன்று கவிதை அமைய வேண்டும்
2. நடைமுறை கதைகளை உதாரனமாக எடுத்து கொள்ளலாம்.
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று.
4.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
5. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
6.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் இரு கோடுகள் (S karthikraja) இரண்டாம் பரிசு 2 திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் நட்பு திமு திபி (Kiruthika ranganathan) மூன்றாம் பரிசு 3 திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் அன்புள்ள தோழிக்கு உயிரின் உயில் -முஹம்மத் ஸர்பான் (Mohamed Sarfan) முதல் பரிசு 16-Oct-2015 5:42 pm
தேர்வு முடிவு வெளியாகி விட்ததூ 16-Oct-2015 2:35 pm
முடிவு அறிவிக்கப்படும் தேதி 10.10.2015 இன்று தேதி 11.10.2015 முடிவுகள் வெளியாகிவிட்டனவா? 11-Oct-2015 9:52 pm
தேர்வு mudivu eppoyuthu arivippirkal ? 10-Oct-2015 6:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
சுரேஷ்குமார்

சுரேஷ்குமார்

பெங்களூரு
அர்த்தனன்

அர்த்தனன்

ஸ்ரீலங்கா.வவுனியா
நவின்

நவின்

நாகர்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
மேலே