சுதந்திரம்

கிடைத்ததென்று எவன் சொன்னான்
சுதந்திரம்
கிடைக்காமல் தவிக்கின்றனர் பலர்
தினம் தினம்
ஒற்றை ஆடையை உடம்பில் உடுத்தி
உழைக்கும் உழவனுக்கு உணவில்லை
நள்ளிரவில் கிடைத்த சுதந்திர நாட்டில்
தனித்து நடக்க பெண்ணுக்கு தைரியமில்லை
சிரித்து விளையாடிய குழந்தையிடம்
சீறி பாய்ந்த வஞ்சகர்களை சுட்டு தள்ள
அதிகாரிகளுக்கு உரிமையில்லை
பசுமை நிறைந்த நாட்டில் ஏழைகளின்
பஞ்சத்தை போக்க எவருமில்லை
தாழ்த்தபட்டவன் அவன் என்று தள்ளி நடக்கும்
காலம் இன்றும் மாறவில்லை
குடிமகன்கள் நாட்டை விட்டு மதுபாட்டிலை
தேடி ஓடும் காலம் வெகுதூரமில்லை
கட்டுமரத்தில் கடலுக்கு செல்பவனை
சுட்டு தள்ளி சுடு காட்டுக்கு அனுப்பும்
நிலைமை இன்னும் ஓயவில்லை

இப்படி இந்த நாடு இருக்கையில்
கிடைத்ததென்று சொன்ன சுதந்திரத்தின் தாகம்
இன்றும் எங்களுக்கு அடங்கவில்லை

எழுதியவர் : கார்த்திகா (12-Sep-15, 2:22 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 860

மேலே