பிரியாதே
![](https://eluthu.com/images/loading.gif)
விழிகளின் ஓரமாய் வழிகிறது கண்ணீர்
காரணம் கேட்கவும் ஆளில்லை
காரணம் கூறவும் வார்த்தையில்லை
வசனங்களால் சொல்ல இது கதையுமில்லை
வார்த்தைகளால் சொல்ல இது கவிதையுமில்லை
மௌனத்தால் மட்டுமே சொல்ல முடியும்
மனதால் மட்டுமே அறிய முடியும்
உயிரால் மட்டுமே உணரமுடியும்
உயிரே எனை விட்டு பிரியாதே