நீ வேண்டும்

காலந்தோறும் உன் கை பிடித்து நடக்க வேண்டும்
நகம் கடித்தால் உன் விரலை நீட்ட வேண்டும்
பசி எடுத்தால் நீயாகவே ஊட்ட வேண்டும்
உறக்கம் வந்தால் தலையணையாக நீ வேண்டும்
வியர்வை வந்தால் உன் மூச்சு காற்றாக வேண்டும்
தலை குளித்தால் தலை துவட்ட நீ வேண்டும்
உறக்கமின்றி தவித்தால் தாலாட்ட நீ வேண்டும்
மழையில் நனைந்தால் குடை கொண்டு வர வேண்டும்
காய்ச்சலால் துடித்தால் மருந்து கொடுக்க மிரட்டவேண்டும்
நான் மிரட்டினால் கொஞ்ச வேண்டும்
நான் கொஞ்சினால் கெஞ்ச வேண்டும்

வேண்டும் -- வேண்டும் --- வேண்டும்
என் ஆயுள் முடியும் வரை நீ வேண்டும்

எழுதியவர் : (10-Jan-16, 2:29 pm)
Tanglish : nee vENtum
பார்வை : 92

மேலே