தொலைந்து போன என் கைப்பேசி

என் மார்போடு ஒட்டிக்கொண்ட என் கைப்பேசி
அசந்து படுத்தால் கூட என்னை அதிர்ந்து எழுப்பும்
நிசப்தத்தில் வைத்தால் கூட நிமிடத்திற்கு பல அழைப்புகள்
தகவல் பரிமாற பல குறுந்தகவல்கள்
கை ரேகையும் தேய்ந்தது நான் அனுப்பிய குறுஞ்செய்தியால்
இடம் இல்லாமல் இன்பாக்ஸ்-ம் நிரம்பியது


என் பயணங்களில் என் தோழனாய் உடன் வந்தது
இன்பம் தொலைந்த நேரத்தில் இனிமையான இசை தந்தது
ஒரு நிமிடம் கூட பிரியாமல் நிழலாய் என்னுடன் இருந்தது
காலை அலாரம் கொண்டு சேவலாய் எழுப்பியது
நான் பேசும் பொது தோழனாய் தோளில் சாய்ந்தது
இப்படி என்னுடன் இருந்த கைப்பேசி ஒரு நாள் தொலைந்தது
அன்று என் மனமோ உடைந்தது

காலையில் எழுப்ப ஆளில்லை
இசையும் கேட்கவில்லை
யாருடனும் பேசவில்லை
குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை

என் கைக்குள் வாழ்ந்த கைப்பேசி மறுபடியும்
கிடைக்குமா என் கைக்குள்

எழுதியவர் : கார்த்திகா (10-Jan-16, 1:34 pm)
பார்வை : 183

மேலே