எழுதுவதை விட
பேச்சு சிறந்தது தானே..!
ஆனாலும் ஏனோ
சிலரிடம் பேச முடிவதில்லை
சிலரிடம் பேசப் பிடிப்பதில்லை
சிலரிடம் மட்டும் பேசப் பிடிக்கிறது
சிலரிடம் பேசினால்தான் பிடிக்கிறது
சிலரிடம் பேசிப் பயனில்லை
சிலரிடம் பேசித்தான் ஆக வேண்டியிருக்கிறது.!
இன்னும் ஒன்று,
.................................................
இதெல்லாம் பேசிய பிறகுதான் தெரிய வருகிறது.