பாரதியார் கடிதம்- படித்ததில் பிடித்தது

பாரதியாரின் கடிதம்
ஓம் சக்தி
கடயம்
30 ஜனவரி, 1919
ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்,
இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலிவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்கார்ரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின் மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையாத்தாயிற்று.

இந்த விஷயத்தைக் குறித்து மஉறாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி. அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக் கூடிய தொகையை ”ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி” பழைய கிராம்ம், கடையம்” என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னமாச் சித்தி மூலமாக வேனும், நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்.

உனக்கு மகாசக்தி அமரத் தன்மை (தருக)
உனதன்புள்ள,
சி. சுப்பிரமணிய பாரதி
ஆதாரம்- காணக் கிடைக்காத
கடிதங்கள்
ஆசிரியர்- முல்லை பிஎல் முத்தையா

எழுதியவர் : பகிர்வு - கே. அசோகன் (11-Jan-16, 9:31 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 2276

மேலே