காட்சிப் பிழைகள் - 44- செல்வமுத்தமிழ்
என் ரகசியமானவனுக்கு
பகிரங்கமாய் ஒரு கடிதம் !
என்
உயிரை மட்டும்
உறிஞ்சி எடுக்கும்
வினோத அன்னங்கள்
உன் விழிகள் !
என்
மௌனம், மொழி
இரண்டையும் கொல்லும் ( கொள்ளும் )
இச்சை தீ
உன் இதழ்கள் !
என்
இரவுகளை வேய்ந்துகொள்ளும்
இதமான குளிர்
உன் ஸ்பரிசங்கள் !
நீ என்
நிழலோடு கூட
உடன் வர மறுக்கிறாய்
நானோ உன் நினைவுகளோடு
நித்தமும் உடன்கட்டை ஏறுகிறேன்...
சற்று விபரிதமானதுதான்
இந்த காதல் தொற்று
ஆதியில் பக்கம் வந்தது
அந்தியில் வெட்கம் தின்றது
அடுத்தது என்னாகுமோ ??
இவையனைத்தும்
உனக்கும் எனக்குமான வெளியில்
எனக்கு மட்டுமான கனாக்கள் !
=============================
தோழிகளின் வைபவங்களில்
தொடுக்கப்படும் கனைகளில்
முகத்தின் மாற்றத்தை
முன்மொழியும் கண்ணாடியில் ...
இப்போதெல்லாம் என்
இரவுகளை ஆட்கொள்ளும்
இனம்புரியாத ஏதோஓர் நடுக்கத்தில் ...
கணத்திற்கு கணம்
கண்மூடிதிறகின்றன
உனைப்பற்றி ஓராயிரம் வினாக்கள் ..
=================================
எங்கே இருக்கிறாய்
என் கள்வா ???
இப்படிக்கு
உன் செல்வா ....
( தோழர் ஜின்னா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !!)