பயணம்

மாலை நேர
பயணம்
வாடகை
மகிழ்வுந்தில்...

பயண முடிவில்
பற்றுச்சீட்டில்
பாதியானது
பணப்பை....

சேவை வரி
ஆடம்பர வரி
கேளிக்கை வரி
என
வரிவரியாய் வாடகை...

அன்று
என் பாட்டனும்
பூட்டனும்
எதிர்த்த வரிக்கொடுமை...

இன்று
அரசாங்கத்தின்
மூலமும்...
தனியார் நிறுவனம்
மூலமும்..

எழுதியவர் : (12-Sep-15, 4:52 pm)
Tanglish : payanam
பார்வை : 120

மேலே