காற்று தூளி
காற்று தூளி,,,
============
எல்லாக் களவு வழக்குகளையும்
என் கண்களுக்கே அளித்துவிடு ம்ம்ம்ம்
சிறையைமட்டும்
உன் கண்களாக செய்துவிடு
முட்டாய்த்தொலைத்த குழந்தையாக்கி
ஆண்மை குறுகச்செய்யாதே டீ
நான் சத்தியம் செய்த அத்தனைப் பேரும்
என்னை சும்மாவிடமாட்டர்கள் தெரியுமா ம்ம்ம்
கட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன்
பிறை தரிக்க நோட்டமிட்டு ,,
அடர்விடரில் சிகை அமர
மூங்கில்களால் வாங்கில்செய்வேன்
காதலிப்பாயா
காற்றிலே தூளி கட்டி,,,
கடிவாள வேலி தாண்டி
கருப்பிசையும் அடிவயிற்றில்
கருங்குயிலின் இசைமீட்ட
கனவுகளில் இடம்வேண்டும் தருவாயா
கன்னமிட்ட பெண்மைக்கொரு
வண்ணம்பூச வார்த்தை திருடி
அன்னமிடும் உதடுகளால்
மின்னலிடும் கவிதை செய்வேன்
கண்மணியே நீ வருவாயா
இல்லை கள்வனென எண்ணி எந்தன்
கரம் மறுப்பாயா ,, வெறுப்பாயா ம்ம்
கார்முகிலைக் கயிறிழுத்து
கன்று உனை தோளில் கட்டி
வென்றுபல மினுக்கள் துரத்தி
நிலாமுலையில் பாலளிப்பேன்
உன் நித்திரையை மடி சுமப்பேன்
கலங்கிவிடாதே
நீண்டு பல காலம் சென்று
வாண்டு செய்யும் மழலை ஒன்று
வகுக்க வேண்டி வந்தாலும்
வாரி எடுத்து மார்பில் சூடி
வம்பு செய்ய வாய்ப்பளிப்பேன்
வெம்பி விடாதே ம்ம்
வென்று எனை சென்றுவிடு
கொன்று உனைச்சுற்றவிடு
நின்று நமை வாழவிடு,,
ஆனால்,,,,ஒன்றுபட ஏய்த்துவிடாதே
அனுசரன்