பகல் கனவாகும்
இளம் பருவ ஆண் பெண்
இருபாலரிடையே
தவிர்க்க முடியாத கவர்ச்சியே
காதல் உணர்ச்சி;
இருவரின் ஆழமான அக்கறையும்,
ஒருவர் மற்றவரிடையே காட்டும் பரிவுமே
காதல் உணர்ச்சி;
இருவரின்
இதய தாபத்தைத் தணிக்கவல்லதே
காதல் உணர்ச்சி;
இருவரின் உள்ளத்தை இணைக்கும்
கண்ணால் காணமுடியாத பிணைப்பே
காதல் உணர்ச்சி;
இருவரின் விருப்பை
நனவாக்கும் இனிய கனவே
காதல் உணர்ச்சி;
ஆனால், தனிமையில் வாடும்
இரு உள்ளங்களில், காதல் என்பதே
ஒரு பகல் கனவாகும்!