குற்றமா இயற்கையா உரிமையா

..."" குற்றமா !! இயற்கையா !! உரிமையா !! ""...

வண்டுக்கு தேனை கொடுத்து
பூ மகரந்த சேர்கை செய்வது
குற்றமா ??? இயற்கையா ???

கரையை முத்தமிடும் அலைகள்
கரைதாண்டி ஆழிப்பேரலையாவது
குற்றமா ??? இயற்கையா ???

பசிபோக்க பயிர் விளையும் பூமி
பாதியாய் வெடித்து பூகம்பமாவது
குற்றமா ??? இயற்கையா ???

வாழ்வாதாரமான மழை நீர்
கொட்டித்தீர்த்து வெள்ளமாவது
குற்றமா ??? இயற்கையா ???

பெற்றோரை தெருவில் விட்டுவிட்டு
சமூக கிருமியாய் வாழ்வதிங்கு
குற்றமா ??? இயற்கையா ???

சமத்துவத்தை மறந்து எல்லாம்
தனதாக்கி சொந்தம் கொண்டாடுவது
குற்றமா ?? உரிமையா ???

சகோதரத்துவத்திற்கு சமாதிகட்டி
சாதி சண்டையிட்டு கொ(ள்)ல்வது
குற்றமா ??? உரிமையா ???

நாட்டை நல்வழி படுத்துவேனேன
மதுக்காடைகளை திறந்திருப்பது
குற்றமா ??? உரிமையா ???

ஆடைகளை குறைத்துக்கொண்டு
ஆபாசமாய் அங்கத்தை காட்டுவது
குற்றமா ?? உரிமையா ???

வலிமைபெற்ற காரணத்தால் ஆண்
வன்புணர்வில் ஈடுபடுவதிங்கு
குற்றமா ??? உரிமையா ???

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ) சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ) சகூருதீன். (15-Sep-15, 10:58 am)
பார்வை : 97

மேலே