வா பார்க்கலாம்
மொட்டு அரும்புவதைப் போல
இளம் காலை சிரிப்புப் போல
சிறகடிக்கும் பறவை போல
வசந்தம் வீசும் தென்றல் போல
சில்லென கொட்டும் அருவி போல
சின்னக்குயிலின் மெல்லிசை போல
வா வா பார்க்கலாம் கொட்டியிருக்கும் இயற்கை அழகை!!!

