சிரிப்பு

ஒவ்வொரு செடியிலும்
ஒவ்வொரு வகையாய்
பூத்திடும் ஒரேபூ
இந்த 'சிரிப்பு'தான்
எப்போதும் பூத்துககுலுங்கிடும்
முல்லையாக ஒரு செடியில்!
எப்போதாவது பூத்திடும்
குறிஞ்சியாக இன்னொரு செடியில்!
தேனீக்கு உணவளிக்கும்
ரோசாவாக ஒரு செடியில்!
தேனீயை உணவாக்கும்
குடுவைபூவாக மற்றொரு செடியில்!
நித்ய சுகம்தரும்
நித்யகல்யாணியாய் ஒரு செடியில்!
நிச்சயமாய் சாவுதரும்
அரளியாக பிறிதொரு செடியில்!
உங்கள் செடியில்
பூ பூத்திட
பிறர் கண்ணீர்
தண்ணீர் ஆகாதவரை
என்றுமே அழகுதான்
உங்கள் புன்னகைப்பூ!

எழுதியவர் : அனுசுயா (15-Sep-15, 3:43 pm)
பார்வை : 2071

மேலே