இன்று போய் நாளை வா
இன்று போய் நாளை வா
================================ருத்ரா
பல்ஸார் பைக்.
பின்னே
பல்லில் நகம் கடித்து
முகத்தில்
இரண்டு கண் மட்டும் தெரிய
துப்பட்டாவில் சுற்றிக்கொண்டு
அவனைத்தொற்றிக்கொண்டு
அண்ணா சாலை முழுதும்
டயர்கள் வழுக்க
வெண்ணை வழிவது போல்
வலம் வந்தாகி விட்டது.
அப்புறம்
அந்த நகரத்து பிரம்மாண்ட "மாலுக்குள்"
அவன் அவளுக்காக
அவனது "ஏ.டி.எம்மை "
தேய் தேய் என்று தேய்த்து
அவளை பூரிக்க வைத்தான்.
அடுத்த முறை தேக்கும்போது
எந்திரம் "சாரி" சொன்னது.
இனி மெரீனாவின்
துடிக்கும் வான விளிம்பின்
அந்தி சிவப்பு உதடுகளில்
அழுந்திக்கிடக்க வேண்டியது தான்.
அந்த வெள்ளிமணல் விரிப்பில்
நட்சத்திரப்பூக்கள் அவன் காலை
வருடுவதாய் நெளிந்து குழைந்தான்.
"உன் இதயம் எனக்குத்தானே!"
அவன் கேட்டான்.
"அதை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறாய்.?"
"நீ என்ன சொல்கிறாய்"
"சரி வா! தருகிறேன்"
அங்கே ஒரு பலூன் காரனிடம்
இதய வடிவ பலூன் ஒன்றை
பத்து ரூபாய்க்கு வாங்கி
அவனிடம் கொடுத்தாள்.
"பை...
நாளை "மதன்" வருகிறேன்
என்று சொல்லியிருக்கிறான்.
பை..பை..பை.."
=================================