காதல் பயணம்

காதல் எணும் சுமையை நீ சுமந்து
கற்பனை எணும் பூந்தேரில் நீ அமர்ந்து
வாழ்கை எணும் பாதையில் நீ பயணிக்கும் போது
அந்த பாதை உனக்கு பூ பாதையாகதான் தெரியும்!!

சிறு தூரம் சென்றபின் சிரு பள்ளம் மேடு வரும்
அதையும் கடந்து சந்தோஷமாய் துள்ளி செல்வாய்
பின்பு கண்ணீர் எணும் உயரமான மலைகலை கடக்க நேரிடும்
அப்போது உன் மனதில் சிறு கலக்கம் தோன்றி மறையும்!!!

நீ கடந்த பாதையில் ஊரை மறந்து உறவை மறந்து
தாடி வளர்த்து போதையில் மூழ்கி பித்து பிடித்து
மாண்டு போனவனையும் கண்டு நீ
இவர்கள் எல்லாம் மூடர்கள் என்று நீ நினைப்பாய்!!!!

நீ காண்பது நிஜம் என்று உன் உள் மனது சொன்னாலும்
காதல் மோகத்தில் உன் நினைவுகள் மறுத்து பயணத்தை தொடர்வாய்
பாதி பயணத்தை கடந்த பின்புதான் உன் உடலில் உள்ள
உயிரணுக்கள் ஒவ்வொன்றும் மரணத்தின் விழிம்பை தொட்டுக்கொண்டு இருக்கும்!!!!!

காதலி என்று நேற்று வந்தவளை உன் இதயத்தில் இடம்
கொடுத்து அவளுக்காக உன் உயிரையும் கொடுக்கும் என் நன்பா
அந்த இதயத்திற்கு உருவம் தந்து உயிர் கொடுத்த
தாயை தவிக்க விட்டுட்டோமே என்று என்றைக்காவாது நினைத்தது உண்டா!!!!!

அண்ணாதுரை ராஜா

எழுதியவர் : அண்ணாதுரை ராஜா (15-Sep-15, 5:37 pm)
சேர்த்தது : அண்ணாதுரை ராஜா
Tanglish : kaadhal payanam
பார்வை : 127

மேலே