விதவைகள் மட்டும் விதிவிலக்கோ
விதவைகள் மட்டும் விதிவிலக்கோ ?
வானவில் வண்ணம் போல
வாழ்க்கை அமைய நோக்கும்
முடிவிலா கனாக் காணும்
முந்துறும் இளமைக் காலம்
மன்மதன் சேட்டையாலே மனமது
மதனை நாடும் ! அன்னவளோ
பெற்றோர் சொல்லுக் கிசைந்தாள்
பேதைக்கு அவர் மணம் முடித்தார்!
கருத்தின்றியே கைபிடித்தாள் எனினும்
கணவனே தெய்வமென வாழ்ந்தாள்.
விதிசெய்த சதியோ ! இல்லை
விமலன் இட்ட கட்டளையால்
காலன் செய்த கொடுமையோ
காவலனை இழந்தாள்! அந்தோ
இழந்தாள் மகிழ்வெல்லாம் இந்நாள்
இனிவருமோ மீண்டும் பொன்னாள்.
ஏங்கித் தவிப்பது நெஞ்சோடு
தூக்கம் மறந்தது கண்ணோடு
ஊனமானது உயிர் தன்னோடு
உணர்வு இழக்குமோ உடல்கூடு
இருந்தும் ஏன் இந்தக் கோலம்.
இவள் ஜடமோ?அதுபொய்யன்றோ.!!
ஊனுருக்கி உள்ளம் கருகிவெம்மை
ஊற்றில் வெந்து மடிவதும்விதியோ
இவள் உலகப் பார்வையில் விதவை,
விதவை என்றால் விடிவேஇல்லையோ
வில்லங்கம் இல்லா வாழ்வும்இல்லையோ
.விதியே விரைந்து பதில் சொல்.
காலங்கள் மாறும் கோலங்கள்மாறும்.........
காவியம் மாறும் கதைகளும்மாறும்..
விதவைகள் மட்டும் விதிவிலக்கோ ?
விமலன் வழியில் விரும்பியவாழ்வை
இங்கு விதவைகள் கூடஏற்கட்டுமே
இறை புது விதைகளைத் தூவட்டுமே!