நேற்று இன்று நாளை
நேற்று ! இன்று ! நாளை"!
இற்றுப்போன இதயம் ஏனோ மறந்தது
முற்றாய் "நேற்று" தந்தப் படிப்பினை
இன்று வாழக்கைநிலை உயர்வே ஆனாலும்
நேற்று வந்தவழி மறந்திடப்போமோ!
நேற்று என்பது சரித்திரம் அதுவே
இன்றைய வழ்க்கைக்கு வழிகாட்டி
சற்று உற்றுநோக்கி உணர்ந்து அறிந்தால்
நேற்று என்பது அன்னைதந்தையே
இன்றும் நாளையும் மனைவி மக்களே
நேற்று நிகழ்ந்தது நல்லதோஅல்லதோ
தோற்றும் வென்றும் படித்தது பாடமே
நேற்று என்று ஒன்று நேர்ந்திராதெனில்
தோற்றம் பெறுமோ இன்றும் நாளையும்
ஏற்றம் தந்து இன்றைய நிலைக்கு
ஏற்றிவிட்ட "நேற்று " உவமைஉருவாம்
மாற்று இலாத அன்னை தந்தையே
நன்றி அறிந்த நெஞ்சம் அவர்களை
என்றும் நினைவில் வைத்துப்போற்றிடுமே!