திண்பண்டம்

இன்று என்னால் குழந்தைக்கு
வாங்கி தரயியலும்
சாக்கலேட்டும்,பிஸ்கட்டும்
பெயர்கூட அறியாத
வண்ணகாகிதத்தில் அடைத்ததையும்
என்னமோ மனசை
சஞ்சலத்தை கொடுக்கிறது.

நான் வளரும் போது
ஏகப்பட்ட பலகாரங்கள்
இருக்கும் மாலை நேரத்தில் ..

பணியாரமும் ,நல்ல இனிப்பு
கேழ்வரகு புட்டும், அரிசி
கொழுக்கட்டையும், பருப்பு ,கடலை
சுண்டலும் , நீர் உருண்டையும் ,
முழங்கை நெய்வழிய
உண்ணும் கேசரியும்..

இன்னும் விதவிதமாய்
மாலை சிற்றுண்டியாய்
எங்களுக்காய் அம்மாவின்
கைமணத்தில் காத்திருக்குமே...

முறுக்கும் , அதிரசமும்
ரவை ,பயறு உருண்டையும்
லட்டும் ,சீடையும்
எள்ளடையும் எப்போதும்
இருக்கும் பண்டங்களாய்...

படிப்பை பற்றி சிந்தித்தேன் ..
அடிப்படையை பற்றி மறக்கிறேனே..
ஆரோக்கிய உணவினை
அலட்சியம் செய்து என்ன
தருகிறேன் வளமான
எதிர்காலம் குழந்தைகளுக்கு ...

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (16-Sep-15, 3:17 pm)
பார்வை : 452

மேலே