நல்லாசிரியர் நலமாய் வாழியவே
நல்லாசிரியர்!
நலமாய் வாழியவே!!
முடிவிலா முதலவன் அருளால்
முன்செய்த நல்வினைப் பயனாய்
ஆசிரியர் பணியாற்றும் ஆர்வலர்
அர்ப்பணிப்புடன் தனித்துவமாய்
நன்று கற்பிப்பார் !அகரம் தொடங்கி
சிகரம் தொடும் நல்லாசிரியர்!
தனித்துவம் தன்முனைப்பு
தன்னார்வம் அறிவுதேடல்
விடாமுயற்சி கடினஉழைப்பு
இவையே நல்லாசிரியர் நாளும்
வெற்றிக்கு உச்சாடனம் செய்யும்
செயலூக்க தாரக மந்திரமாம்!
திறன்றிந்து சொல்லும் ஆற்றலும்
தன்னை வென்றாளும் திறமையும்
தன்னலம் பேணாத் தகைமையும்
தார்மீக சிந்தனைப் பிடிப்பும் ஈற்று
மாணவமணிகள் மாண்புடன் திகழ
மறை ஓதும் மனநல மருத்துவராம் நல்லாசிரியர்!
ஒருதேசத்தின் பன்முக வளர்ச்சி
ஓருங்கிணைந்த மக்களின் முயற்சி
கல்வி கேள்வியில் அம்மக்களின்
தேர்ந்த அறிவின் சாட்சி !ஆதலின்
கல்வி கற்பித்தல் இறைபணி புனிதப்பணி
நல்லாசிரியர் ஏற்கும் முதன்மைப்பணி.!
நிலையாமை எனும் சீர்பெருமை
நிலைத்த இப்பூவுலகில் கல்லாமை
நில்லாது ஓட்டிட செம்மாந்தர்
சொல் ஆளுமை அறிந்துயர்வார்
இயலாமை நீங்கிடும்! ஏங்குவோர்
இல்லாமை பொய்த்திடும் ! நாளும்
வளம்பெற்று வாழ்வாரே!
விதைகள் விருட்சமாகி ஊர்நடுவே
விளங்கும் "பயன்மரம்" என்றே
சிறுமலர்கள் மலர்ந்து சிறந்திடச்
சிறப்பாக கல்விப்பணி ஆற்றும்
சீர்மிகும் அண்ணவரைப் பொற்றி
சிந்தைக் குளிர பாராட்டுவோமே!
சுவர் இல்லாமல் சித்திரமில்லை
உழைப்பு இல்லாமல் உயர்வில்லை
சித்திரம் சிறப்பாய் வரைவதனால்
சித்திரம் ஊடே சுவர் தெரிவதில்லை
அத்திறம் வாய்த்த இத்திறத்தார்
அகிலனருளால் நலமாய்வாழியவே!