இறைவனுக்கு நவில்வோம் நன்றி
இறைவனுக்கு நவில்வோம் நன்றி!
நேற்றுப் பெற்றப் படிப்பினையால்
கற்றுத் தேர்ந்த வழிமறையால்
மாற்றுக் குறையா மேன்மையினால்
நாளை என்ற நம்பிக்கையில்
நாளும் வாழும் மனிதன்
இன்று என்ற நிஜத்தில் வாழ்வது
இறைவன் அருளால்தானே
இன்று வாழ வாய்ப்பு அளித்த
இறைவனுக்கு நவில்வோம் நன்றி!