காதல் ------------ வெளி விருத்தம்
கண்ணில் தெரியும் காட்சி கண்டேன் - மகிழ்ந்தேனே .
விண்ணில் நீயே விந்தை ஆனாய் - மகிழ்ந்தேனே .
மண்ணில் நீயும் மயக்கம் தந்தாய் -- மகிழ்ந்தேனே .
பண்ணில் பாடல் பாட வந்தேன் -- மகிழ்ந்தேனே .
பருவம் தன்னைப் பார்த்தக் காதல் -- மகிழ்ந்தேனே .
உருவம் பார்த்தே உவகை கொண்டேன் -- மகிழ்ந்தேனே .
கருவில் நீயே காதலி ஆனாய் -- மகிழ்ந்தேனே .
திருவாய் மலர்ந்து திடமாய் நின்றாய் -- மகிழ்ந்தேனே .
கலைகள் பலவும் கற்றுத் தேர்ந்தாய் --- மகிழ்ந்தேனே .
மலைகள் கூட மயங்கி நிற்கும் -- மகிழ்ந்தேனே .
சிலைகள் செதுக்கும் சிற்பி சிற்பம் -- மகிழ்ந்தேனே .
அலைகள் தவழும் அன்பின் இதயம் -- மகிழ்ந்தேனே .

