வெற்றி பெறாதது காதல்
காதலை சொல்லாத
காவியமில்லை.....!
காதலை சொல்லாத
ஊடகமில்லை .....!!
காதலை சொல்லாத
திரைப்படமில்லை ...!!!
காதலிக்காத
மனிதர்களில்லை .....!
காதல் கதைகளை
ரசிக்கும் மனிதர்கள் - ஏனோ
காதல் செய்வதை விரும்புவதில்லை
காதல் தோல்வி..!
எங்கும் காதல் தோல்வி - ஏனோ
காதல் வென்றதாய்
சரித்திரமில்லை .....!
போரில் கூட வெற்றி
சாத்தியம்- அனால்
காதல் போரில்
வெற்றி என்பது
கனவில் கூட
சாத்தியமில்லை.....!