கண்மூடி காதல்

என்னவளே!...
என் கண்களை திருடிக்கொண்ட ஓவியமோ நீ
எந்த பெண்ணை பார்த்தபோதும்
உன்னை மட்டுமே வரைந்து காட்டுகிறாய்...
தொலைந்துபோகிறேன் சில நேரங்களில்
தொலைவில் யாரோ உன் பெயர் சொல்லி அழைக்க...
ஆயிரம் யுகங்கள் பிரிந்தது போல் ஒரு சோகம்
கன்னிமைப்பொழுதின் சிறிய இடைவெளி கூட...
விடுதலை இல்லா சிறைச்சாலை
உன் இதழோர புன்னகை...
கடனுக்காவது காதல் கொள்
நான் ஒரு காதல் கடனாளி...
இப்படிக்கு
- சா.திரு-