மழை எனும் அற்புதம்

சில நேரங்களில் தூறலாய்!
சில நேரங்களில் சாரலாய்!
எப்படி வந்தால் என்ன!
எல்லோருக்கும் பிடிக்கிறது உன்னை!
மேகம் சமைத்த அமிழ்தமே!
மேனி எங்கும் பரவசமே!
நிலவுக்கு பூமிதனில் பிறந்திட ஆசை!
நீ வருகையில் நனைந்திட ஆசை!
என்ன தவம் செய்தது குடை
எப்போதும் உன்னில் நனைவதற்கு!
என்ன வரம் கிடைத்தது சிப்பிக்கு
எப்போதும் தன்னில் சுமப்பதற்கு!
நிலம் மீது நீ கொண்ட காதலை
நிறங்களால் நிரப்புகிறாய்!
மரம் வளர்த்து மலர்களால்
மணம் விசுகிறாய்!
மின்னல் என்ன மேகலையா
உன் மெல்லிய இடுப்பிற்கு!
இடி சப்தம் என்ன மேளமா
உன் இனிமை காதலுக்கு!
வானவில் என்ன உன்
திருமண அழைப்பிதழோ!
வண்ணத்தால் அழகாய்
திரண்டு கொலுவிருக்கு!
பூவையர் மனதின் ஆதிக்கமே!
பூமிக்கு கிடைத்த பொக்கிஷமே!
இயற்கை அன்னை இதழ் ரசமே!
இறைவன் படைத்த அதிசயமே!
மயிலுக்கு சிலிர்ப்பு ஆனாய்!
மலைக்கு உயிர் ஆனாய்!
மண்ணுக்கு காதலன் ஆனாய்!
மனிதனுக்கு கடவுள் ஆனாய்!