இடை
![](https://eluthu.com/images/loading.gif)
வாள்விழியால் வவ்வுவா யாருயிரை வாள்விழியே
வாளியா வில்லா விரி
வவ்வு-கவர்தல்
யாருயிரை=யார்+உயிரை என்றும் ஆருயிரை என்றும் மடக்கானது
விரி-விரித்துச்சொல் என்றும் விரி என்றும் மடக்கானது
அது சரி இடை என்று தலைப்பிட்டு விட்டு
எதையோ பாடுகிறீர் என்கிறீர்களா
இடையில்தானே பாடி இருக்கிறேன்
அத்தனை எழுத்துக்களும் இடை இனவருக்கம் தானே
ஆம் ஆம் இது இடை இனவருக்க மடக்கு